‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு குரல் கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்

Prabha Praneetha
4 years ago
‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு குரல் கொடுக்கும்  ஜி.வி.பிரகாஷ்

மோகன் ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது

‘திரெளபதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. ரிச்சர்ட் ரிஷி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார். 

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முதல் பாடல் வருகிற செப்டம்பர் 10-ந் திகதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

‘அம்மாடி’ எனத் தொடங்கும் இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இப்பாடலுக்கு ஜுபின் இசையமைத்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4