அமெரிக்காவில் இதுவரை 37.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன

#world_news #Covid Vaccine
அமெரிக்காவில் இதுவரை  37.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து அங்கு 37.4கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 37,44,88,924 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியான தகவலின்படி மொத்தம் 37,35,16,809 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 20,69,08,710 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 17,59,68,266 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4