மூன்று நாட்களுக்குள் ஒரே குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் மகள் மரணம்

Prathees
4 years ago
மூன்று நாட்களுக்குள் ஒரே குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் மகள் மரணம்

புத்தளம் வெப்பமடுவ பகுதியில் 51 வயதான தாயும் அவரது 37 வயது மகளும் கொவிட் வைரஸால் நேற்று (06) உயிரிழந்தனர். 

அதேவேளை, இரண்டு தினங்களுக்கு முன்னர் குடும்பத்தில் தந்தையும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவரது உடல் வேப்பமடுவ மயானத்தில் ரகசியமாக புதைக்கப்பட்டதாக  புத்தளம் சுகாதார அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகளால் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக  புத்தளம் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி குறித்த வீட்டில் உயிரிழந்த குடும்பத்தலைவரின் உடல் அடக்கம் செய்ய அனுமதி அளித்ததாக நம்பப்படும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து வாக்குமூலம்  பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, புதைக்கப்பட்ட சடலம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவைப் பெற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும் என புத்தளம் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4