கேரளாவில் நிபா வைரஸ் 188 பேர்க்கு தொற்று

Prasu
3 years ago
கேரளாவில் நிபா  வைரஸ் 188  பேர்க்கு தொற்று

கேரளத்தில் நிபா வைரசினால் உயிரிழந்த சிறுவன் மூலம் 188 பேருக்கு அந்தத் வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கேரளத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் வைரசினால் கோழிக்கோடு மாவட்ட த்தைச் சோ்ந்த 12 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

இந்நிலையில் மாநிலத்தில் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறுகையில், ‘‘நிபா வைரசினால் முதலில் பாதிக்கப்பட்டது சிறுவன்தானா, எப்படி அந்தச் சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை அறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுவன் மூலம் 188 பேருக்கு வைரஸ் பரவியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அவா்களில் 20 போ் வைரசினால் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த 20 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனை முதலில் சிகிச்சையகம் ஒன்றுக்கு அவனது பெற்றோா் அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா் தனியாா் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி என வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறான். இதனால் அவன் மூலம் மேலும் பலருக்கு நிபா வைரஸ் பரவியிருக்கக் கூடும். அவா்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நடவடிக்கைகளை வலுப்படுத்த முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி பரிசோதனை மையத்தை தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனை முடிவுகளை விரைவில் பெற உதவும்’’ என்று தெரிவித்தாா்.

கேரளத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு நிபா வைரஸ் தொடா்பாக பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய நிா்வாகத் திட்டத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. அனைத்து மாவட்ட அதிகாரிகளும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவா்களை கண்காணிப்பில் வைக்க அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது