சார்ஜ் போட்டு 05 ஆவது நிமிடத்தில் வெடித்து சிதறிய போக்கோ ஸ்மார்ட் போன்
போக்கோ நிறுவனத்தின் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் கொண்டிருக்கும் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் தர செயல்பாட்டை வழங்குகிறது.
சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், தனது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜூன் 15 ஆம் தேதி வாங்கிய புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ செப்டம்பர் 4 ஆம் தேதி வெடித்ததாக அவர் தெரிவித்தார். ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைத்த 5-வது நிமிடம் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இத்துடன் வெடித்த நி்லையில் உள்ள ஸ்மார்ட்போன் மற்றும் அதனை வாங்கிய கட்டண ரசீது உள்ளிட்டவைகளையும் அவர் இணையத்தில் வெளியிட்டார். ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவத்திற்கு போக்கோ தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.