08.09.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: அக்கம்பக்கத்தினருடன் இருந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும்.
பரணி: பலகாலம் அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.
கார்த்திகை 1: கருத்து வேறுபாட்டால் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: பணி நெருக்கடிகள் குறைந்து நிம்மதி வரும்.
ரோகிணி: பணியாளர்கள் கூடுதல் வேலைகளை பார்க்க வேண்டி வரும்.
மிருகசீரிடம் 1,2: நன்மைகள் முயற்சியின்றி தாமதமாகவே கிடைக்கும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாகித் தெளிவீர்கள்.
திருவாதிரை: விடாப்பிடியாக முயன்று சில வேலைகளை முடிப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பக்தி சிந்தனை கூடுதலாகும். பண வரவு உண்டு.
கடகம்:
புனர்பூசம் 4: வழக்கத்தைவிட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.
பூசம்: குழப்பங்கள் அகலும். கூட்டு முயற்சி மகிழ்ச்சி தரும்.
ஆயில்யம்: அவசியம் ஏற்படுவதால் வாகனத்தை சீர் செய்வீர்கள்.
சிம்மம்:
மகம்: சிறிய பிரச்னை ஒன்று உருவாகிப் பிறகு சரியாகும்.
பூரம்: தடைகளை தாண்டி முன்னேறி உற்சாகம் அடைவீர்கள்.
உத்திரம் 1: உங்களுடைய செயல் ஒன்றால் குடும்பங்கள் இணையும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: உங்கள் அஜாக்கிரதையால் விவாதம் வராமல் கவனம் தேவை.
அஸ்தம்: முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.
சித்திரை 1,2: பொது வாழ்வில் ஈடுபாடு வரும். உங்களின் புகழ் கூடும்.
துலாம்:
சித்திரை 3,4: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
விசாகம் 1,2,3: பணியாளர்களிடையே இருந்து வந்த வீண் கசப்பு நீங்கும்.
விருச்சிகம்:
விசாகம் 4: விலை உயர்ந்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
அனுஷம்: பங்குதாரர் பிரச்னை தீரும். உழைப்பால் உயர்வு காண்பீர்கள்.
கேட்டை: மறுக்கப்பட்ட விஷயம் ஒன்று கிடைக்கும். கூடுதல் நன்மையை பெறுவீர்கள்.
தனுசு:
மூலம்: முந்தைய பிரச்னைகளுக்கு புதிய தீர்வு காண்பீர்கள்.
பூராடம்: வாழ்வில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகுவர்.
உத்திராடம் 1: சொத்துக்கள் வாங்குவதில் மிகுந்த கவனம் தேவை.
மகரம்:
உத்திராடம் 2,3,4: சவால் நிறைந்த பணி ஒன்றை நிறைவேற்றி வெல்வீர்கள்.
திருவோணம்: உடன்பிறந்தவர்கள் பகை நீங்கப்பெற்றுப் பாசமழை பொழிவார்கள்.
அவிட்டம் 1,2: பிரச்னை கொடுத்து வந்த நபர் விலகிக் காணாமல் போவார்.
கும்பம்:
அவிட்டம் 3,4: நேற்றைய வருத்தங்களுக்குத் தீர்வு காண்பீர்கள்.
சதயம்: வீண் வம்புக்குப் போக வேண்டாம். உங்களின் திறமை கூடும்
பூரட்டாதி 1,2,3: பொறுமையின்மையால் மனஸ்தாபம் ஏற்பட அனுமதிக்காதீர்கள்.
மீனம்:
பூரட்டாதி 4: அனுபவமிக்க நபர்களின் ஆலோசனையால் முன்னேறுவீர்கள்.
உத்திரட்டாதி: தைரியம் கூடும். தனிப்பட்ட வாழ்வில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
ரேவதி: நேற்றைய சோர்வு நீங்கி துடிப்புடன் இயங்கி வெற்றி அடைவீர்கள்.