வவுனியாவில் கோர விபத்து – இருவர் மரணம்

#Vavuniya #Hospital #Death #Accident
Yuga
4 years ago
வவுனியாவில் கோர விபத்து – இருவர் மரணம்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிக்கப் வாகனமும், டிப்பரொன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இருந்து ஏ9 வீதி ஊடாக பயணித்த பிக்கப் வாகனமும், வவுனியா நோக்கி சென்ற டிப்பர் வாகனமும் கனகராயன்குளம் சந்திக்கு அண்மையில் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.

சம்பவத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் சடலங்களும் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து கனகராயன்குளம் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4