ஒவ்வொரு போட்டிக்கும் முன்னரும் உடலுறவு - தொடர்ந்து தங்கப்பதக்கம் வெல்லும் நீச்சல் நாயகி
ரஷ்ய நீச்சல் வீராங்கனை அல்லா ஷிஷ்கினா ஒவ்வோர் தடவையும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை வெல்வார்.
ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை 2012, 2016 மற்றும் 2020 என ஒவ்வோர் தடவையும் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று வருபவர்.
32 வயதான அவர் கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக நீச்சல் விளையாட்டில் தனது ஆதிக்கத்தின் ரகசியத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் ஸ்போர்ட் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில்,
அல்லா ஷிஷ்கினா ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் உடலுறவு கொண்டதாகவும், உச்சகட்டம் அடைவதற்கு முன் நிறுத்திவிடுவதாகவும் வெளிப்படுத்தினார். அது அவளுக்கு ஒரு மாபெரும் சக்தியை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
"நான் டாக்டர்களின் ஆராய்ச்சியை நம்பி எங்கள் மருத்துவர் டென்னிஸுடன் விவாதித்தேன். நீங்கள் சாதிக்க விரும்பினால், நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அறிவியல் சமூகம் கூறுகிறது. இது தசைகளின் வலிமையை அதிகரிக்கிறது மற்றும் போட்டிக்கு வலுவான உத்வேகத்தை அளிக்கிறது என்று அவர் கூறுகிறார்.