கர்ப்பமாவதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு கோரிக்கை

#Covid 19 #Covid Vaccine #SriLanka
Prathees
4 years ago
கர்ப்பமாவதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு கோரிக்கை

கோவிட் வைரஸின் திரிபுகள் நாளுக்கு நாள் வேறுபடுவதால் கர்ப்பமடைவதை தாமதப்படுத்துமாறு வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தபத்து தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கோவிட் ஒரு புதிய நோய்.

கோவிட் பற்றி எங்களுக்கு உண்மையில் தெரியாது. நாளுக்கு நாள் புதிய வகைகள் உருவாகின்றன. இது வைரஸ்களின் அம்சமாகும்.

கர்ப்ப காலத்தில் கோவிட் தொற்றினால் நாங்கள் அதை அதிக ஆபத்துள்ள சூழ்நிலையாக எடுத்துக்கொள்கிறோம்.இது குழந்தையையும் தாயையும் பாதிக்கலாம்.

நீங்கள் திருமணமாகி குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால்இ  விரும்பினால். மறுபரிசீலனை செய்து ஒரு வருடம் தாமதப்படுத்தவும்.

மருத்துவத்தில் ஒரு வருடம் என்பது நீண்ட காலம். அப்போது நமக்கு வரும் பிரச்சனைகள் தெரியும். தடுப்பூசிகள் பற்றியும் எங்களுக்குத் தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4