சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் தீடீர் அதிகரிப்பு!

#Central Bank #International
Reha
4 years ago
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் தீடீர் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டிருந்த நாணயமாற்று வீதங்களுக்கு அமைய கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்த இலங்கை ரூபாயின் பெறுமதி, இன்று திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று வழங்கப்பட்ட தினசரி நாணய மாற்று விகிதம் பின்வருமாறு.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 203 ரூபாயாக காணப்பட்ட நிலையில் இன்று 202.99 ஆக குறைந்துள்ளது. பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் நேற்று317.47 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 282.32 ஆக குறைந்துள்ளது.

யூரோவின் விற்பனை விலை நேற்று 273.52 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 243.52 ரூபாயாக குறைந்துள்ளது. கனேடிய டொலர் நேற்று 183.38 ரூபாயாக காணப்பட்ட நிலையில், இன்று 163.38 ரூபாயாக குறைவடைந்துள்து.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4