இராணுவத்திற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்ய நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கை வெளியீடு!

#India
Prabha Praneetha
3 years ago
இராணுவத்திற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்ய நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கை வெளியீடு!

விமானப்படை, மற்றும் கடற்படைக்கு தேவையான ஆயுதங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கையை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.

இதன்படி இராணுவ துணை தளபதி உள்ளிட்டோருக்கு இந்த நிதி அதிகாரம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள நிதி அதிகாரம் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அதிகபட்சம் 500 கோடி ரூபாய் வரையே செலவிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர விமானப் படை மற்றும் கடற்படைக்கும் இந்த அதிகாரம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை, கள நிலவரத்துக்கு ஏற்ப படைப் பிரிவு தளபதிகள் உடனடியாக முடிவெடுக்க இந்த புதிய கொள்கை உதவும் எனவும் இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!