4வது நாளாக தங்கத்தின் விலை வீழ்ச்சி

Prabha Praneetha
3 years ago
4வது நாளாக தங்கத்தின் விலை வீழ்ச்சி

தங்கம் விலையானது கடந்த சில மாதங்களாக சரிவான விலையிலேயே காணப்படுகின்றது 

இந்த நிலையில் இன்று இன்னும் விலை குறையுமா? அல்லது அதிகரிக்குமா? முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கருத்து என்ன? வாங்கலாமா? வேண்டாமா? முக்கிய லெவல்கள் என்னென்ன? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இது குறையுமா? எவ்வளவு குறையும்? கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தங்கத்தின் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பு, சற்று வலுவடைந்து காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் மேலும் சரிவினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தங்க வர்த்தகர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என கூறப்படும் நிலையில், தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம்.

ஏற்கனவே தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9,200 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் கானப்படுகிறது. ஆக இது குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.