பாடசாலை மாணவர்களின் தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய வைத்தியர்

#SriLanka #Covid Vaccine #Student #doctor
Yuga
4 years ago
பாடசாலை மாணவர்களின் தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய வைத்தியர்

பள்ளி குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போடுவதற்கு முன்பு மருத்துவ நிபுணர்களின் முடிவுகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று குழந்தை மருத்துவர் ஹெரிஸ் பத்திரகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்

பல்வேறு நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசி வழங்குவதற்கு பிரித்தானியா நடவடிக்கை மேற்கொண்டது. எனினும் நாட்டில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்ட தென அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்கள் தொடர்பில் கொவிட் தடுப்பூசிகள் ஆய்வு மட்டத்தில் உள்ளமையினால் அது தொடர்பில் இதுவரையில் விஞ்ஞான ரீதியான சாட்சிகள் இல்லை.

தடுப்பூசிகளின் குறுகிய காலம் மற்றும் நீண்ட கால முடிவுகள் தொடர்பில் இன்னமும் உரிய முறையில் கருத்து வெளியிட முடியாதென வைத்தியர் பத்திரகே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் வேகமாக மரபணு மாற்றிக் கொள்ளும் கொவிட் வைரஸ் மாறுபாடுகள் பல இதுவரையிலும் உருவாகியுள்ளது.

கொவிட் தொற்றிற்காக வழங்கப்படும் தடுப்பூசிகளின் வெற்றிகரமான செயற்பாடு தொடர்பில் மீண்டும் ஆராயும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவசர தீர்மானங்கள் எடுக்க வேண்டாம் என அவர் தனது கடிதம் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4