ஈழம் தொடர்பான படத்தில் நடிப்பீர்களா... லொஸ்லியாவின் அதிரடியான பதில்

Nila
4 years ago
ஈழம் தொடர்பான படத்தில் நடிப்பீர்களா... லொஸ்லியாவின் அதிரடியான பதில்

இலங்கையில் இருந்து வந்து 2019 இல் நிகழ்ந்த பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து பிரபல்யமான லொஸ்லியா பிரண்ட்ஷிப் என்னும் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்ததோடு கூகிள் குட்டப்பா படத்திலும் நடித்துள்ளார்.

அவரிடம் இந்திய ஊடகம் கேட்ட கேள்விக்கு நறுக்கென பதில் அளித்துள்ளார்.

கேள்வி -  `நீங்க ஈழத்துல இருந்து வந்ததால இந்தக் கேள்வி. ஈழம் தொடர்பாக இங்கே ‘ஜெகமே தந்திரம்’, ‘மேதகு’, ‘ஃபேமிலிமேன்’னு படைப்புகள் வந்திட்டிருக்கு. உங்க பார்வை என்ன? அப்படிக் கதைகள்ல நடிக்க ஆர்வமா இருக்கீங்களா?’’

பதில் - ‘‘அங்கே பிறந்து வளர்ந்ததால அங்கே என்ன நடந்ததுன்னு தெரியும்ங்கறதால ஈழம் தொடர்பான கதைகள்ல நடிக்க மாட்டேன்.

வெளியே இருக்கறவங்களுக்குத்தான் அதுக்கான தெளிவு இல்லாமலிருக்கும். ஆனா, இலங்கையில் இருக்கற எல்லாருக்குமே அங்கே என்ன நிகழ்ந்ததுன்னு தெரியும் என்பதாலே அப்படியான படங்கள் என்னால பண்ண முடியாதுன்னு நினைக்கறேன்.

சிலர் இதை நாங்க ஒரு படமாகத்தான் பண்ணியிருக்கோம்னு சொல்லிடுறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரை அங்கே நிகழ்ந்தது, பார்த்த விஷயங்கள் எல்லாமே ரொம்பக் கொடூரமானவை. அப்படியான விஷயங்கள் இல்லாத படங்களை என்னால பண்ணவே முடியாது.’’

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4