கர்ப்பிணித்தாய்மார் செலுத்திக்கொள்ளவேண்டிய கொரோனா தடுப்பூசி தொடர்பில் வெளியான விபரம்

#Covid Vaccine
Keerthi
3 years ago
கர்ப்பிணித்தாய்மார் செலுத்திக்கொள்ளவேண்டிய கொரோனா தடுப்பூசி தொடர்பில் வெளியான விபரம்

கர்ப்பிணித்தாய்மார் செலுத்திக்கொள்ளவேண்டிய கொரோனா தடுப்பூசி தொடர்பில் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசியை தவிர்ந்த, மற்றய அனைத்து விதமான தடுப்பூசிகளையும் கர்ப்பணித் தாய்மாருக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கர்ப்பணித் தாய்மார்கள் கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு தடுப்பூசியை செலுத்திக் கொண்ட எந்தவொரு கர்ப்பணித் தாய்க்கும், வேறு நோய்கள் ஏற்படவில்லை எனவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பின்னர், குழந்தை பிரசுவித்த தாய்மாரும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு பிறந்த எந்தவொரு குழந்தைக்கும், வேறு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லையென அவர் தெரிவித்தார்.

மேலும் கர்ப்பிணித் தாய்மாருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை தவிர்ந்த, ஏனைய அனைத்து தடுப்பூசிகளுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!