12 வயதுக்கு கீழுள்ள மாணவர்களுக்கு தவறுதலாக போடப்பட்ட தடுப்பூசி!

#Covid Vaccine
Keerthi
4 years ago
 12 வயதுக்கு கீழுள்ள மாணவர்களுக்கு தவறுதலாக போடப்பட்ட தடுப்பூசி!

12 வயதுக்கும் குறைந்த வயதுடைய மாணவர்கள் சிலருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பாகியுள்ளது.

இன்று வியாழக்கிழமை இச்சம்பவம் Rennes மாவட்டத்தில் உள்ள Collège de l'Assomption கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. 12 வயதுக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இங்கு இடம்பெற்று வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர்-டிசம்பர் மாதங்களில் பிறந்த நான்கு சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கட்டாயமாக 12 வயதுடைவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி போட அறிவுறுத்தப்ப்ட்டுள்ள நிலையில், கவனயீனம் காரணமாக 11 வயதுடைய நான்கு மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் சிறப்பு கண்கணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். குறித்த கல்லூரியின் நிர்வாகி, பொறுப்பதிகாரி தேடப்பட்டு வருகின்றார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4