2021 இருபதுக்கு இருபது உலக கோப்பைக்கான இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு!

Prasu
4 years ago
2021 இருபதுக்கு இருபது உலக கோப்பைக்கான இங்கிலாந்து  மற்றும் தென் ஆப்பிரிக்கா  அணி அறிவிப்பு!

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி முதல் ஆளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்களது அணியை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டன. நேற்றைய தினம் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பைகான தென்னாப்பிரிக்க மற்றும் இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து  வீரர்களின் விவரம்-

  • இயான் மோர்கன், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரண், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், டைமல் மில்ஸ், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட். ரிசர்வ் வீரர்களாக டாம் கரண், லியாம் டாவ்சன், ஜேம்ஸ் விண்ஸ் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி விவரம்-

  •  தெம்பா பவுமா ( கேப்டன்) குயிண்டன் டிகாக், ஜார்ன் ஃபார்டூய்ன், ஹெயின்ரிச் க்ளாசென், கேசவ் மஹாராஜ், எய்டன் மர்க்ராம், டேவிட் மில்லர், வியான் மல்டர், லுங்கி நெகிடி, ஆண்ட்ரிச் நார்ட்ஜே, ட்வெயின் ப்ரெடோரியஸ், ககிஸ்கோ ரபாடா, டாப்ராய்ஸ் ஷாம்சி, சாசி வான் டெர் டுஸ்சேன்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4