நுவரெலியா காட்டுப்பகுதியில் காணாமல் போன 26 வயதுடைய யுவதி மீட்பு

#NuwaraEliya
Prathees
4 years ago
நுவரெலியா காட்டுப்பகுதியில் காணாமல் போன 26 வயதுடைய யுவதி மீட்பு

நுவரெலியா டன்சினன் பகுதியில் காட்டுக்கு தாயுடன் கடந்த 5 நாட்களுக்கு முன் விறகு வெட்டுவதற்காக சென்ற 26 வயதுடைய யுவதி மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.

குறித்த யுவதி நுவரெலியா கிகிலியாமான காட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவத்த கீழ் பிரிவில் வசிக்கும் ஜெயபாலன் கற்புகதாரணி என்ற 26 வயது யுவதியே இவ்வாறு மீட்கப்பட்டவர்.

நுவரெலியா இராணுவ முகாம் அதிகாரிகள்இ நுவரெலியா பொலிஸார் மற்றும் டன்சினன் தோட்ட மக்கள் இணைந்து கடந்த 5 நாட்களாக இவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதன் போது சாந்திபுர பிரதேச மக்கள் கிகிலியாமான காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த யுவதி காட்டில் கூக்குரல் எழுப்பியுள்ளார். அதன் போது இவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

5 நாட்கள் காட்டில் தனியாக பசியுடன் அலைந்த யுவதிக்கு பிரதேச மக்கள் உணவுகளை வழங்கிய பின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாயுடன் டன்சினன் தோட்டத்தில் இருந்து விறகு வெட்ட சென்ற நிலையில் தாயிடமிருந்து வழி தவறி பல பாதைகளில் அங்கும் இங்கும் அலைந்து வீடு திரும்ப முடியாமல் தவித்ததாகவும்இ இரவு வேளைகளில் அச்சம் காரணமாக எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்ததாக காணாமல் போயிருந்த யுவதி தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4