பிரித்தானிய ராஜ குடும்பத்தின் மக்கள் அபிமான வரிசையில் இளவரசர் ஹரியின் இடம்.

#world_news
பிரித்தானிய ராஜ குடும்பத்தின் மக்கள் அபிமான வரிசையில் இளவரசர் ஹரியின் இடம்.

பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் வரிசையில் இளவரசர் ஹரி எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ராஜ குடும்பத்தின் மீது ஹரியின் மனைவி சேற்றை வாறி இறைக்க, கூடவே ஒத்து ஊதினார் ஹரி. அது மக்களுக்குப் பிடிக்கவில்லை!

அது முதலே அவருக்கு மக்கள் மனதில் அவருக்கு சறுக்கல்தான்.

அண்மையில மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் பிரித்தானி ராஜ குடும்பம் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் அளவை பட்டியலிட்டது.சந்தேகமேயில்லாமல் அந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் பிரித்தானிய மகாராணியாரேதான்! அவருக்கு 80 சதவிகித ஆதரவு உள்ளது.

அடுத்த இடத்தைப் பிடிப்பவர் இளவரசர் வில்லியம், அவரைத் தொடர்ந்தபடியே வருபவர் பட்டியலிலும் கேட்தான்! அவர்களுக்கு முறையே 78, 75 சதவிகித ஆதரவு உள்ளது.

ஆனால் இதுவரை இல்லாத வகையில், ஹரிக்கு வெறும் 34 சதவிகித ஆதரவே உள்ளது. அங்கேயும் அவரை பின் தொடர்வது அவரது மனைவி மேகன், அவருக்கு வெறும் 26 சதவிகித ஆதரவே உள்ளது.

இதற்கிடயில், இந்த செய்தி ஹரிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4