இலங்கை அணிக்கு 164 ஓட்டங்களை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா அணி

Prasu
4 years ago
இலங்கை அணிக்கு 164  ஓட்டங்களை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா அணி

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 164 என்ற வெற்றி இலக்கை தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியில் தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்பு 163 ஓட்டங்களைப் பெற்றது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் ஏடன் மார்க்ரம் அதிகபட்சமாக 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

164  ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆடி வரும் இலங்கை அணி 15  ஓவர் நிறைவில் 04  விக்கெட் இழப்பிற்கு 95  ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை வெற்றி பெற 30  பந்துகளை 69 ஓட்டங்களை பெற வேண்டும். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4