முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 28 ஓட்டங்களால் வெற்றி

#SriLanka
Prasu
4 years ago
முதலாவது போட்டியில்  தென் ஆப்பிரிக்கா  அணி 28  ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டியில் 28 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் தென்னாபிரிக்கா அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் ஏடன் மார்க்ரம் அதிகபட்சமாக 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி, தென்னாபிரிக்கா அணி 28 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4