4 மணி நேரத்துக்கும் மேலாக ஊடகவியலாளர்கள் மீது தலிபான்களால் கொடூர தாக்குதல்

#Taliban
Keerthi
4 years ago
4 மணி நேரத்துக்கும் மேலாக ஊடகவியலாளர்கள் மீது தலிபான்களால் கொடூர தாக்குதல்

ஆப்கானில் தலிபான்களுக்கு எதிராக பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் செய்தி சேகரித்த இரண்டு ஊடகவியலாளர்கள் தலிபான்களால் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸை சேர்ந்த வெளிநாட்டு பத்திரிகையாளர் மார்கஸ் யாம், மற்றும் ஆப்கன் செய்தி நிறுவனம் இந்தப் படங்களை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளன.

அதில், இரண்டு பத்திரிகையாளர்கள் உள்ளாடையுடன் நிற்கவைக்கப்பட்டு பின்புறத்திலிருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு முதுகிலும் பின்புறத்திலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏழெட்டு தலிபான்கள் தங்களை தொடர்ந்து கைத்தடிகளால் 4 மணி நேரத்துக்கும் மேலாக தாக்கியதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால் ஆப்கானில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் நிலவுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4