கொரோனாவுக்கு மருந்தாகுமா எறும்பு சட்னி ? நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

#India #Court Order #Corona Virus #Covid Vaccine
Yuga
3 years ago
கொரோனாவுக்கு மருந்தாகுமா எறும்பு சட்னி ?  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

சிவப்பு எறும்பு சட்னியை கொரோனாவுக்கான மருந்தாக அங்கீகரிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உயர்நீதிமன்ற நிராகரித்துள்ளது.

இந்தியாவின் ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை உணவாகவிரும்பி உண்டு வருகின்றனர்.

சிவப்பு எறும்புகளுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதைத் தேங்காய் சட்னி போல பயன்படுத்துகிறனர்.

இந்நிலையில்,ஒடிசாவை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் இது தொடர்பாக அம்மாநிலத்தின்  மேல்நீதிமன்றில்பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.

அதில் சிவப்பு எறும்பு சட்னியில் இரும்புச்சத்து, கல்சியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும், இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கொரோனாவுக்கு மருந்தாக இதனை பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்குஉயர் நீதிமன்றுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்,  கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்துகள் நிறைய உள்ளன. 

இவற்றை கொரோனாவிற்கு மருந்தாக பயன்படுத்த முடியாது. இந்த எறும்பு சட்னியை நீங்கள் உங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருக்கலாம். ஆனால் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் அதனை கொடுக்க உத்தரவிட முடியாது.

மேலும் ஒடிசா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்த மனுதாரர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறி, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.