சட்டவிரோதமாக பூண்டு விற்பனை செய்த சதோச அதிகாரிகளுக்கு ஆப்பு

#Sathosa #Bandula Gunawardana #SriLanka
Prathees
4 years ago
சட்டவிரோதமாக பூண்டு விற்பனை செய்த சதோச அதிகாரிகளுக்கு ஆப்பு

சதோச விற்பனை நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட இரண்டு கொள்கலன் வெள்ளைப்பூண்டு உயர் நிர்வாகத்திற்கு தெரியாமல் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரால் சதொச தலைவர் மற்றும் பிரதான நிர்வாகிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையால் அத்தியாவசிய பொருட்கள் சதோச விற்பனை விலையங்களுக்கு  விற்பனைக்காக வழங்கப்பட்டபோது இரண்டு கொள்கலன்கள் பூண்டு  வழங்கப்பட்டதாகவும் அதனை உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சதோச தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன மேலதிக விசாரணைகளுக்காக சிஐடி யிடம் முறைப்பாடு அளிக்குமாறு சதோச தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4