கடுமையான கட்டுப்பாடுகளால் இலங்கையில் அதிகரிக்கும் பொருட்களின் விலை !

#SriLanka #prices
Yuga
4 years ago
கடுமையான கட்டுப்பாடுகளால்  இலங்கையில் அதிகரிக்கும்  பொருட்களின் விலை !

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

பல பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இறக்குமதியாளர்கள் தங்கள் விலையை தற்போது அதிகரிப்பார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பே சில பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்பு 250,000 – 275,000 வரை இருந்த சில கைத்தொலைபேசிகளின் விலை இப்போது 350,000 ஐ தாண்டியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த பொருட்களின் விலையை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று நிதி அமைச்சகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.

டொலரின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4