பிரான்ஸில் மருத்துவமனைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன....

#world_news #Hospital #France
பிரான்ஸில் மருத்துவமனைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன....

பிரான்ஸிகொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று, சாவு விபரங்களை தற்போது Santé publique France வெளியிட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் 10.115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வியாழக்கிழமையோடு ஒப்பிடுகையில் 208 பேரால் இது குறைவாகும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2.151 பேர் தீவிர சிகிச்ச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் 2.195 பேர் சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.

மருத்துவமனையின் நெருக்கடிகள் மெல்ல மெல்ல வீழ்ச்சியடைந்து வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 81 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 115.400 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 88.700 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4