பிரான்ஸில் இரண்டாவது தடுப்பூசி பெற்று 6 மாதமாயின் மூன்றாவது பெறலாம்....

#world_news
பிரான்ஸில் இரண்டாவது தடுப்பூசி பெற்று 6 மாதமாயின் மூன்றாவது பெறலாம்....

மூன்றாவது தடுப்பூசி, விரைவாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கே போடப்பட்டு வருகின்றது. பிரான்சில் 18 மில்லியன் பேர் இந்த மூன்றாவது தடுப்பூசியை பெற தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.

தடுப்பு ஊசி செலுத்தி ஆறுமாதம் கடந்தவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை சுகாதார அமைச்சர் வழங்கியுள்ளார்.

* இதன்படி ஜோன்சன் ஜோன்சன் தடுப்பூசியை செலுத்தி 4 மாதம் கடந்தவர்கள் மீண்டுமொரு தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.

 * moderna , pfizer தடுப்பூசியை செலுத்தி ஆறு மாதத்துக்கு மேற்பட்டு இருந்தால் நீங்களும் மீண்டுமொரு தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். (18- 64 வயது வரை உள்ள அனைவருக்கும் )
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4