ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை கன்னத்தில் அறைந்த நபர் விடுதலை!

#world_news
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை கன்னத்தில் அறைந்த நபர் விடுதலை!

சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் ஒருவர் அறைந்ததை நீங்கள் எமது லங்கா4 ஊடகத்தினுாடாக அல்லது வேறு வழியால் அறிந்திருக்கலாம்.

இவ்வாறுஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை கன்னத்தில் அறைந்தவன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளான்.

கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Tain-l'Hermitage (Drôme) நகருக்கு பயணமாகியிருந்தபோது, Damien Tarel எனும் இளைஞன் கூட்டத்தில் நின்றுகொண்டு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை கை நீட்டி கன்னத்தில் அறைந்தான். ஜூன் 8 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, உடனடியாக அவன் கைது செய்யப்பட்டான்.

பின்னர் ஜூன் 10 ஆம் திகதி அவனுகு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று செப்டம்பர் 11 ஆம் திகதி சனிக்கிழமை அவன் Valence சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4