ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி

#Sri Lanka President #Court Order #Chandrika Kumaratunga
Yuga
4 years ago
ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி

ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடிதம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடிதம் ஒன்றை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

நடிகரும், சமுக வேவையாளரும் , பொதுமக்களுக்காக உண் மையாக அர்ப்பணித்து அவரின் தனிப்பட்ட பணத்தை மக்களின் நலனுக்காகச் செலவழித்த அரசியல்வாதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

பாரதூரமான குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிலரை அரசாங்கம் விடுவித்திருப்பதால், பாரதூரமான குற்றங் களைச் செய்யாத ரஞ்சன் சிறைதண்டனை அனுபவிப்பது துரதிர்ஷ்டவசமானது என சந்திரிகா குமாரதுங்க அந்தக் கடிதத் தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் படி 04 வருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4