பிரான்ஸ் உள்ளூர் விமான விபத்தில் 3 பேர் பலி

#world_news
பிரான்ஸ் உள்ளூர் விமான விபத்தில் 3 பேர் பலி

பிரான்ஸில் உள்ளூர் விமானம் ஒன்று சீரற்ற காலநிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த அனைத்துப்பயணிகளும் இறந்துள்ளதாக அறிய வருகிறது

பிரான்சின், Nancy (Meurthe-et-Moselle) நகரில் இருந்து Essonne நகர் நோக்கி, கடந்த வெள்ளிக் கிழமை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

அப்போது விமானமானது Dijon (Côté-d'Or) பகுதியை அடைந்த போது திடீரென விபத்துக்குள்ளானது. இதனால் குறித்த விமானம் சரியாக உள்ளூர் நேரப்படி பகல் 2.30 மணிக்கு விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்துள்ளது.

அதன் பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், விமானத்தில் உள்ளிருந்த மூன்று பேரும் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

மோசமான காலநிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் உள்ளூர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.    

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4