சன்ஷைன் சுத்தா கொலைச்சம்பவம்:  ஹரக் கட்டாவின்  கூட்டாளி கைது

#Police #Court Order
Prathees
4 years ago
சன்ஷைன் சுத்தா கொலைச்சம்பவம்:  ஹரக் கட்டாவின்  கூட்டாளி கைது

பாதாளக் குழுவின்  உறுப்பினரான சன்ஷைன் சுத்தாவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வானின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி மாத்தறை கொட்டாவில பகுதியில் 'சன்ஷைன் சுத்தா' சுட்டுக்கொல்லப்பட்ட பயன்படுத்தப்பட்ட வான் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாத்தறை பிரதேச குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதனையடுத்துஇ  வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 33 வயதான வானின் சாரதி நேற்று கைது செய்யப்பட்டார்.

 அவரிடம் மேற்கொள்ளப்படட விசாரணைகளில் கொலையாளிகளுக்கு 8 இலட்சம் ரூபாவிற்கு குறித்த வான் வாடகைக்கு வழங்கியதாகவும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற 'ஹரக் கட்டா'வுக்கு நெருக்கமான ஒருவருக்கு இது வழங்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

வானின் உரிமையாளர் பல குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வானின் உரிமையாளர் இன்று (11) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4