24 மணிநேரத்தில் ஈரானில் கொரோனவால் 445 பேர் உயிரிழப்பு

#Covid 19 #Death
Prasu
4 years ago
24  மணிநேரத்தில் ஈரானில் கொரோனவால் 445  பேர் உயிரிழப்பு

ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து, மொத்தமாக 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 45இலட்சத்து ஒன்பதாயிரத்து 905பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட எட்டாவது நாடாக விளங்கும் ஈரானில், இதுவரை 52இலட்சத்து 58ஆயிரத்து 913பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 13ஆயிரத்து 380பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 21ஆயிரத்து 114பேர் பாதிக்கப்பட்டதோடு 445பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறு இலட்சத்து 35ஆயிரத்து 628பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஏழாயிரத்து 418பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4