"வலிமை" திரைப்பட வெளியீட்டு திகதியில் குழப்பம்!

#TamilCinema
Prasu
4 years ago
"வலிமை" திரைப்பட வெளியீட்டு  திகதியில்  குழப்பம்!

அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், சமீபத்தில் முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு. படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட 'வலிமை' படக்குழுவினர் தற்போது ரஷ்யா சென்று படப்பிடிப்பை முடித்தனர். அங்கு பைக் சாகச காட்சிகளும் படமாக்கப்பட்டன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4