போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து விநியோகம்
ட்ரோன் மூலம் வான் வழியாக மருந்து மற்றும் மாத்திரைகளை முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் 'Medicine-from-the-Sky' என்ற திட்டம் அறிமுகமாகி உள்ளது. இதனை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஹைதராபாத் நகரில் தொடங்கி வைத்தார்.
தெலங்கானா மாநிலம் ட்ரோன் மூலம் மருந்துகளை விநியோகிக்க அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரோன்கள் வழக்கமான ட்ரோன் போல பறக்காமல் Beyond Visual Line of Sight எல்லைக்கு அப்பாற்பட்டு இவை பறக்க உள்ளன.
மருந்து, மாத்திரை, ரத்தம் மாதிரியானவற்றை இந்த ட்ரோன்கள் கொண்டு செல்ல உள்ளனவாம். தெலங்கானா அரசு, உலக பொருளாதார மன்றம், ஹெல்த் நெட் குளோபல் மற்றும் நிதி ஆயோக் மாதிரியானவை இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
ஹெபிகாப்டர், ப்ளூ டார்ட் மெட் எக்ஸ்பிரஸ், டெக் ஈகிள் என எட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் இந்த சேவையை அங்கு செய்ய உள்ளன.
இந்தியா உலகளவில் ட்ரோன் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை மேற்கொள்ளும். அதற்கு இது முதல் படி. அதற்கு மத்திய அரசு கொண்டு வந்த தாராளமயமாக்கப்பட்ட ட்ரோன் விதிகள், 2021 முக்கிய காரணம். மருந்து மாத்திரைகளை விநியோகிக்க ட்ரோன் பயன்படுத்த படுவது இதுவே முதல் முறை' என மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இந்நிகழ்வில் பேசி இருந்தார்.
சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் ட்ரோன் மூலம் இந்நிகழ்வில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.