ரொனால்டோவின் அதிரடி ஆட்டத்தால் மான்செஸ்டர் அணி வெற்றி!

Prasu
4 years ago
ரொனால்டோவின் அதிரடி ஆட்டத்தால் மான்செஸ்டர் அணி வெற்றி!

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டில்  பிரீமியர் லீக்கில் நியூகேஸில் யுனைடெட்டுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்தார்.

தனது இரண்டாவது அறிமுகத்தின் முதல் பாதியில், 36 வயதான அவர் ரசிகர்களை மகிழ்வித்தார், மான்செஸ்டர் யுனைடெட் சூப்பர் ஸ்டார் இளம் வீரர் மேசன் கிரீன்வுட் கொடுத்த பாசினால் ரொனால்டோ தனது முதல் கோலை அடித்தார்.

 இரண்டாம் பாதியில் 62  ஆவது நிமிடத்தில் அவரது இரண்டாவது கோலை மான்செஸ்டர் அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் ஆட்டம் முடிவில் மான்செஸ்டர்  அணி 4 - 1  என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

மான்செஸ்டர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ 45 மற்றும் 62வது நிமிடத்தில்  இரண்டு கோல்களையும் புருனோ பெர்னான்டோஸ் 80வது நிமிடத்தில் ஒரு கோலையும் ஜெஸ்ஸி லிங்கார்ட் 90வது நிமிடத்தில்  ஒரு கோலையும் பெற்று போட்டியை வெற்றி பெற்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4