12.09.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: பொறுப்பும் பொறுமையும் இருந்தால் எதையும் சுலபமாக சமாளிக்கலாம்.
பரணி: பேச்சிலும் செயலிலும் கவனமாக இருப்போர்க்கு நல்ல நாள்.
கார்த்திகை 1: குடும்ப வருமானம் உயர வழிபிறக்கும். பொறுமை கூடும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: அலுவலகத்திலிருந்து வரும் செய்தி ஒன்று சந்தோஷம் தரும்.
ரோகிணி: முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள்.
மிருகசீரிடம் 1,2: நலம் விரும்பி ஒருவர் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: சுறுசுறுப்பாக பணிபுரிந்து பலரது பாராட்டுகளை பெறுவீர்கள்.
திருவாதிரை: யோகமான நாள். அதிக சம்பளத்துடன் புதிய வேலை உறுதியாகும்.
புனர்பூசம் 1,2,3: ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். செயல் ஒன்று வெற்றி தரும்.
கடகம்:
புனர்பூசம் 4: சமீபத்தில் ஏற்பட்ட பிரச்னை ஒன்று அகலும்.
பூசம்: பல நாள் தொடர்ந்த பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும்.
ஆயில்யம்: தொழில், பணியிடத்தில் உங்கள் வளர்ச்சி திருப்தி தரும் நாள்.
சிம்மம்:
மகம்: பணம் வருவதில் இருந்த தடை அகலும். குடும்பப் பொறுப்பு கூடும்.
பூரம்: சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் 1: உயர்பதவியில் உள்ளவர் ஒருவரிடமிருந்து நல்ல செய்தி வரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: வெற்றி வாய்ப்பு மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு உயர்வு உண்டு.
அஸ்தம்: நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டு. மகிழ்ச்சியான நாள்.
சித்திரை 1,2: நினைத்த நேரத்தில் எதையும் முடிக்கத் தடை ஏற்படும்.
துலாம்:
சித்திரை 3,4: நீங்கள் நம்பிய ஒருவர் அனுகூலமாக நடந்து கொண்டு உதவுவார்.
சுவாதி: பல நாளாக இருந்து வந்த மனக்குழப்பம் ஒன்று தீரும்.
விசாகம் 1,2,3: எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும்.
விருச்சிகம்:
விசாகம் 4: குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
அனுஷம்: கையிருப்பு கரைந்தாலும் நிம்மதி ஏற்படும். நட்பு வட்டம் விரியும்.
கேட்டை: பொது விஷயங்களில் ஈடுபாடு வந்து உங்களின் புகழ் கூடும்.
தனுசு:
மூலம்: நம்பிக்கைக்குரிய தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள்.
பூராடம்: நிறுத்தி வைக்கப்பட்ட நன்மைகள் மீண்டும் கிடைக்கும்.
உத்திராடம் 1: பொது விஷயங்களில் ஈடுபாடு வந்து மகிழ்வீர்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: பற்றாக்குறை இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்
திருவோணம்: குழந்தைகளின் செயலால் மன மகிழ்ச்சி கிடைக்கும்.
அவிட்டம் 1,2: மாணவர்களின் கல்வி மேம்படும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: கடனை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும்.
சதயம்: சொத்து விற்றல், வாங்குதலில் ஆதாயம் உண்டு.
பூரட்டாதி 1,2,3: கணவன் மனைவி இடையே உறவு சிறப்பாக இருக்கும்
மீனம்:
பூரட்டாதி 4: உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
உத்திரட்டாதி: கவரும் தன்மை அதிகரிப்பதால் ஆதாயமான நாள்.
ரேவதி: வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் வெற்றி உண்டு.