15ஆம் திகதியில் இருந்து தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா?

Prabha Praneetha
4 years ago
15ஆம் திகதியில் இருந்து தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா?

செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமென அரசாங்கம் கடந்த   மாதம் அறிவித்திருந்தது.

எனினும் நாட்டில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமை பெறாத காரணத்தினால் குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.

20 – 29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதன் காரணமாக, இவ்வாறு தடுப்பூசி அட்டை வைத்திருக்கும் தீர்மானம் இந்த சூழலில் பொருத்தமானதாக இருக்காது என உயர்மட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4