லண்டனாக மாறும் கொழும்பு ! photos

#SriLanka #Colombo
Yuga
4 years ago
லண்டனாக மாறும் கொழும்பு ! photos

கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய களனி பாலத்தில் பொருத்தப்பட்ட வண்ண மின் விளக்குகள் நேற்று இரவு சனிக்கிழமை ஒளிர விடப்பட்டுள்ளன.

மேலும் இது கொழும்பில் தாமரைக் கோபுரத்துக்கு அடுத்த அழகான மற்றுமொரு கட்டமைப்பாக மிளிர்கிறது என கூறப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கையில் முதல் தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் பாலம் இதுவாகும்

அத்தோடு புதிய களனி பாலத் திட்டத்தின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளையும், புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான வீதியின் இருபக்கத்தையும் அழகுபடுத்துவதற்கு தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகள் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனினும் அந்த வகையில் நீலோற்பலம், வாகை, மே மார, ரொபரோசியா, கஹ மார, செவ்வரத்தை, இலுப்பை மரம், நாகமரம்,அலரி, மகுல் கரட, ஆல மரம் மற்றும் முருத்த ஆகிய மரங்களை வீதியின் இருபுறமும் நடுவதற்கு முன்மொழிந்துள்ளனர்.

அத்தோடு தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடி தானியங்கி நீர் குழாய் கட்டமைப்பை உருவாக்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4