கிரிபத்கொட பிரதேசத்தில் நடந்த கொடூரமான கொலைக்கான காரணம் இதோ!

#Police #Investigation #Death
Prathees
4 years ago
கிரிபத்கொட பிரதேசத்தில் நடந்த கொடூரமான கொலைக்கான காரணம் இதோ!

சபுகஸ்கந்த பெலங்காஹஹேன சந்திக்கு அருகில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று (11) இரவு ஒருவர் வெட்டுக் காயங்களுடன் விழுந்து கிடப்பதாக சபுகஸ்கந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் படுகாயங்களுடன் விழுந்து கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

எனினும் குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்தவர்  27 வயதான மாபோல  பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவரது  நண்பனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் குறித்த நபர் தாக்கப்பட்டதால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும்  அவரை கைது செய்ய சபுகஸ்கந்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிரிபத்கொட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4