கோவிட் தொற்றுடன் காணாமல்போன பொலிஸ்  உத்தியோகத்தரைத் தேடி வலைவீச்சு

#Covid 19 #Covid Variant #Hospital #Police
Prathees
4 years ago
கோவிட் தொற்றுடன் காணாமல்போன பொலிஸ்  உத்தியோகத்தரைத் தேடி வலைவீச்சு

கம்பளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போனவர் 56 வயதான சுப்பையா இளங்கோவன் என்ற பொலிஸ் சார்ஜென்ட் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

33 வருடங்களாக பொலிஸ் சேவையில் இருந்த குறித்த நபர்,  நுவரெலியா மாவட்டத்தில் பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பின்னர் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

தலவாக்கலைஇ, புடலுஓயாவில் வசிக்கும் காணாமல் போன பொலிஸ் சார்ஜென்ட் மூன்று பிள்ளைகளின் தந்தை மற்றும் அவரது மனைவி புடலுஓயா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக உள்ளார்.

பணியில் இருந்தபோது காணாமல் போன பொலிஸ் சார்ஜென்ட் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டபின்னர் அவர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆகஸ்ட் 31 அன்று  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதன் பிறகு தந்தை பல அறிகுறிகள் காணப்பட்டதால் செப்டம்பர் 08 அன்று கம்பளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

தந்தை  மருத்துவமனையில் 10 வது வார்டில் சிகிச்சை பெற்று வந்தார் என காணாமல்போன் பொலிஸ் சார்ஜென்ட் இளங்கோவனின் மகன் அகிநாத் தெரிவித்துள்ளார்.

தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே நாளில், மருத்துவமனை நிர்வாகம் தனது தொலைபேசிக்கு அழைத்து சிகிச்சை பெற்று வந்த தந்தை மருத்துவமனையில் இருந்து தப்பிவிட்டதாக தகவல் தெதரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். 

தந்தைக்கு மருத்துவமனையில் இருந்து தப்பிக்கவோ அல்லது தலைமறைவாகவோ எவ்வித தேவையும் இல்லை எனவும்  காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும்இ காணாமல் போன சார்ஜெண்டைக் கண்டுபிடிக்க கம்பளை மற்றும் கொத்மலை பொலிஸார் பல விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4