சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். 

மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகி உள்ளது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டீ.டி.ராஜா தயாரித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதமே ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4