வல்வெட்டித்துறை கொலை சம்பவம்: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது

#Arrest #Trincomalee #Police
Prathees
4 years ago
வல்வெட்டித்துறை கொலை சம்பவம்: தலைமறைவாகியிருந்த  சந்தேகநபர் ஒருவர் கைது

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பயலனின்றி உயிரிழந்தார்.

 குறித்த கொலையைச் செய்துவிட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவரே 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மற்றையவர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களில் ஒருவர் திருகோணமலை பொலிஸ் பிரிவில் தலைமறைவாகி உள்ளதாக காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்தது.

இதனையடுத்து திருகோணமலை பொலிஸார் எடுத்த நடவடிக்கையில் சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4