நாட்டில் 1579 பேர் குணமடைந்து கோவிட் நிலையங்களில் இருந்து வெளியேறினர்

#Corona Virus
Prasu
4 years ago
நாட்டில் 1579  பேர் குணமடைந்து கோவிட்  நிலையங்களில் இருந்து வெளியேறினர்

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 1,579 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை 412,812 தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 483,280 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 11,152 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4