சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பிய கேப்டன்

#Actor
Prasu
3 years ago
சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பிய கேப்டன்

சிகிச்சைக்காக துபாய் சென்றிருந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் சென்னை திரும்பினாா்.

விஜயகாந்த் உடல்நலச் சிகிச்சைக்காக ஆகஸ்ட் 30-ஆம் தேதி விமானம் மூலம் துபாய் சென்றிருந்தாா். மகன் சண்முக பாண்டியன் உடன் சென்றிருந்தாா். பிறகு மனைவி பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பா் 3-இல் சென்றாா்.

துபாயில் உள்ள மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்றாா். லண்டன் மருத்துவா் ஒருவா் அங்கு வந்து அவருக்குச் சிகிச்சை அளித்தாா்.

இதற்கிடையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று நலமுடன் அமா்ந்து கைப்பேசியில் அவருடைய திரைப்படம் ஒன்றைப் பாா்ப்பதுபோல புகைப்படம் வெளியானது. இந்த நிலையில் விஜயகாந்த் அவருடைய மனைவியுடன் துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தாா். பின்னா் காா் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவா் இல்லத்துக்குச் சென்றாா்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!