கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

#Covid Vaccine #Protest
Prasu
4 years ago
கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கிரீஸ் அரசின் அனைவருக்கும் கட்டாய கொரோனா தடுப்பூசி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.

கிரீஸ் அரசின் கட்டாய தடுப்பூசி உத்தரவை கடைப்பிடிக்காத சுமார் 6 ஆயிரம் சுகாதார முன்களப்பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், Thessaloniki நகரத்தில், கிரீஸ் பிரதமர் Kyriakos Mitsotakis கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்த வளாகத்தை நோக்கி சென்ற சுமார் 2 ஆயிரத்து 500 போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

அத்தோடு, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் புகை வீசியும் போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4