பிரான்ஸில் Ard de Triomphe இராட்சத துணி கொண்டு கட்டப்பட்டுள்ளது.

#world_news
பிரான்ஸில் Ard de Triomphe இராட்சத துணி கொண்டு கட்டப்பட்டுள்ளது.

நெப்போலியன் காலத்து அடையாளமான Arc de Triomphe , தற்போது இராட்சத துணி கொண்டு மூடப்பட்டுள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 25.000 சதுர மீற்றர் அளவு கொண்ட இராட்சத துணியினால் Arc de Triomphe சுற்றி கட்டப்பட்டுள்ளது. கற்றில் சாகசம் செய்யும் 95 வீரர்கள் இணைந்து இந்த Arc de Triomphe இனை ‘பரிசுப்பொதி’ போன்று சுற்றி கட்டியுள்ளனர்.
சொன்னால் நம்புவீர்களா... இது ஒரு கலை. உலகின் அடையாளங்களாக இருக்கும் முக்கிய இடங்களை இராட்சத துணி கொண்டு மூடிக்கட்டுவது ஒரு கலை. காலா காலமாக கண்ணில் தென்படும் ஒரு கட்டிடமோ அல்லது இடமோ,. திடீரென மூடிக்கட்டி மறைக்கப்பட்டு விட்டால் என்னாகும்..? இந்த ஒரு உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துவதே கலைஞர் Christo Vladimirov Javacheff இல் பணி. இதுவரை உலகம் முழுவதும் பல கட்டிடங்களை மூடி கட்டி ஆச்சரியப்படுத்தினார்.
மொத்தமாக 14 மில்லியன் யூரோக்கள் செலவில், Arc de Triomphe கட்டிடம் முழுமையாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. 25.000 சதுர மீற்றர் அளவு கொண்ட மீள் சுழற்சி செய்யக்கூடிய துணியினால், 3000 மீற்றர் நீளமுடைய சிவப்பு கயிற்றை பயன்படுத்தி மூடி கட்டப்பட்டுள்ளது இந்த கட்டிடம்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4