கொழும்பில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுடன் கணவரைக் கொலை செய்த பெண்

#Death #Colombo #Investigation
Prathees
4 years ago
கொழும்பில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுடன் கணவரைக் கொலை செய்த பெண்

இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் கணவரைக் கொலை செய்த மட்டக்குளிய கிராம உத்தியோகத்தர் உட்பட  ஏழு இராணுவ புலனாய்வு வீரர்களை கைது செய்ய கொழும்பு வடக்கு சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

சந்தேகநபரான  பெண் கிராம உத்தியோகத்தருக்கும் இராணுவ கார்ப்ரோலுக்கும் இடையிலான சட்டவிரோத காதல் விவகாரத்தால் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு வடக்கு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து ஏழு இராணுவ வீரர்கள் கொலையில் ஈடுபட்டதாக  தொடர்ச்சியான விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தகொலைச் சம்பவம் ஓகஸ்ட் 14ம் திகதி இடம்பெற்றுள்ளது. இதில் அகில என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோதுஇ ​​பொலெரோ ஜீப்பில் வந்ததாகக் கூறப்படும் இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுஇ  சடலம் சேதவத்தை பகுதியில்  களனி ஆற்றில் போடப்பட்டதாக தெரிவிக்கப்படு கிறது.

கிராம உத்தியோகத்தரின்  கணவரின் உடல் கடந்த 15 ஆம்  திகதி  கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது உடலின் கைகால்கள் கட்டப்பட்டிருந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.

மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றும் பெண்  ஒருவர் கொழும்பு வடக்கு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் உள்ள கோப்ரல் ஒருவருடன் சில காலமாக தகாத உறவு வைத்துள்ளார்.
இந்த உறவு கணவருக்கு தெரியவர அடிக்கடி இருவருக்கும் சண்டைஏற்பட்டதாக தெரிவிக்கப்படு கிறது. 

உதன் பின்னர்  கிராம உத்தியோகத்தர்  தனது கணவரை படுகொலை செய்ய இராணுவ புலனாய்வு கோப்ரல் உடன் சதி செய்தது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைக்கு கொழும்பு வடக்கில் உள்ள இராணுவ முகாமில் ஏழு புலனாய்வுப் பணியாளர்கள் உதவியுள்ளதுடன்,  போதைப்பொருள் கடத்தல்காரரும் இதற்கு உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4