கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தோருக்கான விசேட அறிவுறுத்தல்!

#Covid 19
Keerthi
3 years ago
கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தோருக்கான விசேட அறிவுறுத்தல்!

கோவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வீடு செல்வோருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்ததன் பின்னரும் பல்வேறு ஆரோக்கிய கோளாறுகள் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவிசாவளை மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் சுவாச நோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் துசார கலபட இதனைத் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுக்கு இலக்காகி குணமடைவோரில் 5 முதல் 10 வீதமானவர்களின் நுரையீரலில் நிரந்தமான பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து இரண்டு வாரங்கள் கடந்தும், சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம், உடல் சோர்வு, தலைவலி, நெஞ்சு வலி, கை,கால் வலி, இறுமல், தூக்கமின்மை, நினைவாற்றல் குறைதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!