தேசிய விருது வாங்கிய இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி

Prabha Praneetha
4 years ago
தேசிய விருது வாங்கிய  இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், அவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனர் மணிகண்டனுடன் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே மணிகண்டனுடன் ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய விஜய் சேதுபதி, தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4