பிரித்தானியா பவுண்ட்ஸ் பாக் லோனால் அவதி!

#world_news
பிரித்தானியா பவுண்ட்ஸ் பாக் லோனால் அவதி!

பிரித்தானிய அரசாங்கம் அண்மையில் காப்புறுதிகளுக்கான வரியை அதிகரித்திருந்தது. இதன் காரணம் தற்போது பிரத்தானிய அரசாங்கம் பாரிய நிதி பற்றாக்குறையில் முழ்கியிருப்பதை வெளிப்படுத்துவதோடு பிரித்தானிய அரசு கொரோனா கால கட்டத்தில் வாரி வாரி வழங்கிய சலுகைகளால் தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் தவிக்கிறது.

இதில் ஒன்றுதான் பவுன்ஸ் பேக் லோன். யார் எவர் என்று கேட்டுக் கேள்வி இன்றி 50,000 ஆயிரம் பவுண்டுகளை, பிரித்தானிய அரசு வழங்கியது. ஆனால் தற்போது திறைசேரியில் பண பற்றாக்குறை ஏற்பட, மக்கள் செலுத்தும் வரியை அதிகரிக்க திட்டம் தீட்டியுள்ளது. இதன் ஒரு அங்கமாக நஷனல் இன்சூரன்ஸ் டாக்ஸ் கடந்த வாரம் அதிகரிக்கப்பட்டது.

இதேவேளை இன்று வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் மக்கள் கவுன்சிலுக்கு செலுத்தும் கவுன்சில் டாக்ஸ் தொகையை அதிகரிக்க பல கவுன்சில்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏன் எனில் அரசாங்கம் கவுன்சிலுக்கு கொடுக்கும் பணத்தை சற்று குறைத்துள்ளது. இதனை அடுத்து அதனை ஈடு செய்ய, கவுன்சில் டாக்ஸை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4